எம்மதமும், சம்மதம் குழந்தைகள் மற்றும் பெண்கள் நல அறக்கட்டளை சார்பில், 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது..
எம்மதமும், சம்மதம் குழந்தைகள் மற்றும் பெண்கள் நல அறக்கட்டளை சார்பில், ஓட்டேரி பவானி எல்லையம்மன் கோயில் தெருவில் உள்ள தலைமை அலுவலகத்தில், 75 ஆம் ஆண்டு, சுதந்திர தின விழா, கொண்டாடப்பட்டது..
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு செய்தித்துறையினர் யூனியன் தொழிற்சங்கத்தின் தலைவர் s.ஸ்ரீதர், மற்றும் பொதுச் செயலாளர் V.சத்யா, கலந்து கொண்டு, தேசிய கோடியை ஏற்றிவைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். அறக்கட்டளையின் மாநிலத் தலைவி பத்மினி, தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், நிறுவனத் தலைவர் சையத் அலாவுதீன் சிறப்புரையாற்றினார். பொதுச் செயலாளர் சாய்தா, துணைச் செயலாளர் ஜெனிபர், கொள்கை பரப்புச் செயலாளர் ஜெயக்குமார், இளைஞர் அணி மாநில தலைவர் திலீப் குமார், மற்றும் அறக்கட்டளை சார்ந்த நிர்வாகிகள் உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு பள்ளிக்குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்களையும் பேனாவையும் வழங்கி சுதந்திர தின விழாவை கொண்டாடினர். இறுதியில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Comments
Post a Comment