தமிழ்நாடு செய்தித்துறையினர் யூனியன் திருப்பூர் மாவட்டம் சார்பில் 75 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்.
மாநிலத் தலைவர் ஸ்ரீதர் மற்றும் மாநில பொதுச் செயலாளர் கொளத்தூர் நண்பன் சத்யா அவர்களின் அறிவுறுத்தலின்படி மாவட்டத் தலைவர் கராத்தே மணி மற்றும் மாவட்ட செயலாளர் விக்னேஷ் தலைமையில் திருப்பூர் மாவட்ட அலுவலகத்தில் கொடியேற்றம் விழா நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக பிரஸ் அசோசியன் ஆஃப் இந்தியா மாநில தலைவர் மற்றும் அம்மா எக்ஸ்பிரஸ் தினசரி மாலை நாளிதழ் நிர்வாக ஆசிரியர் ரகுமான் அவர்கள் மற்றும் கொங்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் அவர்கள் பங்கேற்றார்கள்.
மாவட்ட பொருளாளர் ஆனந்தகுமார், மாவட்ட துணைச் செயலாளர் மகாராஜா , மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லோகேஸ்வரன் மற்றும் மாவட்ட துணை தலைவர் சக்திவேல் முன்னிலை வகித்தார்கள்.தமிழ்நாடு செய்தித்துறையினர் யூனியன் திருப்பூர் மாவட்டத்தில் தொடக்கத்திற்கு காரணமான நிர்வாகி மருதமுத்து அவர்கள் சிறப்பு விருந்தினர் ரகுமான் அவர்களை சால்வை அணிவித்து மரியாதை நிமித்தமாக வரவேற்றார்.
அம்மா எக்ஸ்பிரஸ் தினசரி மாலை நாளிதழ் நிர்வாக ஆசிரியர் ரகுமான் அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் குழந்தைகளுக்கு நலத்திட்டம் மற்றும் இனிப்பு வழங்கி விழாவினை சிறப்பித்தார்.மேலும் இவ்விழாவில் கொங்கு மண்டல நிர்வாகிகள் மற்றும் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் திருப்பூர் மாவட்டம் நிருபர்கள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்து தந்தமைக்காக திருப்பூர் மாவட்டம் சார்பாக எங்களது நெஞ்சார்ந்த நன்றிகள்.
Comments
Post a Comment