....எமன் ஏரிக்கு எமனாக மாறிய வருவாய்த்துறை....
அதிகாரிகளின் அலட்சியத்தால் பன்றி மேயும் இடமாக மாறிய பரிதாபம்.....
அரியலூர் மாவட்டம் தா.பழூரில் எமன் ஏரி,வண்ணான் ஏரி, ஐயனார் குளம்,குட்டிக்கதை ஏரி,கொக்கிராம்பள்ளம் ஏரி போன்ற ஏரிகள் நிலத்தடி நீர் ஆதாரங்களாக விளங்கின.
கடந்த 1982..83 வரையான காலம் வரை இந்த ஏரிகளில் நீர் நிறைந்து காணப்பட்டது.
எமன் ஏரிக்கரையில் வரிசையாக புளிய மரங்கள் இருந்தன.
வாலிப வயதினர் அந்த புளிய மரக்கிளைகளில் ஏறி நீர் ததும்பி நின்ற எமன் ஏரிக்குள் டைவ் அடித்தனர்...
ஐயனார் குளம் என்பது பெயருக்கு ஏற்ப பக்தி பரவச இடமாக இருந்தது.
இந்த ஏரியில் தாமரை பூக்கள் அதிகளவில் பூக்கும் என்பதால் ஏலம் கேட்கும் முறையும் அந்த காலத்தில் உண்டு.
வண்ணான் ஏரி என்பது...எமன் ஏரி நிரம்பினால் தெற்கு பகுதி வாய்க்கால் வழியாக டாக்டர் சீனிவாசன் வீடு அருகே இருந்த செங்கற்களால் கட்டப்பட்ட நீர் ஒழுங்கி வழியாக ஐயனார் களத்துக்கு நீர் வந்து அந்த குளம் நிரம்பும். குளம் நிரம்பினால் சுத்தமல்லி..சாலை நீர் ஒழுங்கி வாயிலாக தண்ணீர் ஆனது வண்ணான் ஏரிக்கு செல்லும். அந்த ஏரி நிரம்பினால் சிந்தாமணி என்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்த நீர் ஒழுங்கி வாயிலாக சிந்தாமணி மதுரை வீரன் சுவாமி குளத்துக்கு நீர் செல்லும் அந்த குளமும் நிரம்பினால் மீதமுள்ள நீரானது இடங்கண்ணி என்ற இடத்தில் பாயும் பொன்னாறு என்ற கிளை ஆற்றின் வழியாக பாய்ந்து கொள்ளிடம் ஆற்றில் கலந்து கடலுக்கு செல்லும்.
இத்தனை சிறப்புக்கும் காரணமாக விளங்கிய எமன் ஏரிக்கு தமிழக அரசின் வருவாய்த் துறை யினரே எமனாக மாறியதால் அந்த ஏரியானது தற்போது பன்றிகள் உலவும் குட்டையாக மாறிவிட்டது.
அரியலூர் மாவட்டம் தா.பழூரில் சுத்தமல்லி சாலை என்ற இடத்தில் எமன் ஏரி அமைந்துள்ளது.
தா.பழூர் மற்றும் சிந்தாமணி ஆகிய இரு பஞ்சாயத்துகளுக்கு உட்பட்ட நிர்வாகத்தில் இந்த ஏரி உள்ளது.
பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இருந்த இந்த ஏரிக்கு மேற்கு பகுதியான கோட்டியால்..கீழ மைக்கேல்பட்டி.. போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து மழைநீர் வந்தது.
இதனால் எமன் ஏரிநிரம்பி மற்ற ஏரி..குளங்களை வாழ வைத்தது.
ஆனால்...
இந்த ஏரிக்கு தண்ணீர் வரத்து பகுதியாக விளங்கும் மைக்கேல்பட்டியை சேர்ந்த சிலரும் காங்கிரஸ் கட்சி பிரமுகர் ஒருவரும் ஏரிக்கான வரத்து வாய்க்கால்களை ஆக்ரமித்து அடைத்து கட்டிடங்கள் கட்டினர்.
இதைப்பார்த்த பலரும் ஏரியை முழுமையாக ஆக்ரமித்து வீடுகளை கட்டினர்.
இதன் விளைவாக புகழ்பெற்ற எமன் ஏரிக்கு ஆக்ரமிப்பு கள் எமனாக மாறின.
இதனால் பல ஆயிரம் ஏக்கரில் இருந்த எமன் ஏரி சுருங்கி சிறு குழந்தை மலம், ஜலம் கழிக்கும் இடமாகிவிட்டது.
இந்த நிலையில் அந்தந்த பகுதி ஏரிகளில் விவசாயிகள் தங்களுக்கு தேவையான வண்டல் மண்ணை எடுத்துக்கொள்ளலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டது.
இதை பயன்படுத்திய அரசியல் பிரமுகர்கள் சிண்டிகேட் அமைத்து அரசு அனுமதி கொடுத்த அளவை தாண்டி பொக்லைன் வைத்து சுரண்டி ஏரியை கபளீகரம் செய்தனர்.
இதன்விளைவாக இந்த ஏரியானது தண்ணீர் வரத்தின்றி பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
.இந்த ஏரியின் நிலை அறிந்த வருவாய் துறை.. பொதுப்பணித்துறை உள்ளிட்ட அதிகாரிகள் ஆக்ரமிப்பு மற்றும் வரத்து வாய்க்கால் ஆக்ரமிப்பு குறித்து சிலசர்வேக்களை நடத்தினர்.
குறிப்பிட்ட கட்டிடங்கள் மற்றும் வரத்து வாய்க்கால் ஆக்ரமிப்புகளை நீக்கினால் ஏரிகளை காப்பாற்றலாம் என்றும் அரசுக்கு பரிந்துரை செய்தனர்...
என்ன நடந்து என்ன பயன்...ஏரி முழுமையாக பாழ்பட்டு அதன் சார்பு ஏரிகளும் புல் பூண்டு முளைத்து ஆக்ரமிப்புகளோடு காணப்படுகின்றன.
இந்த ஏரியில் குளித்து விளையாடிய 1980.. காலத்தை சேர்ந்த நண்பர்கள் கூறும்போது..எமன் ஏரி தண்ணீரில் ஒரு ரூபாய் நாணயம் விழுந்தால் எவ்வளவு ஆழமாக இருந்தாலும் நாணயங்கள் கண்ணுக்கு தெரியும்.
வெள்ளை வெளேர் என்று நீர் இருக்கும்.ஆனால் மணல் திருடர்களுக்கு அரசுகள் இடம் கொடுத்ததால் ஏரி மண்ணாகி விட்டது.
அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சிமெண்ட் உற்பத்தி செய்வதற்கான வெள்ளை ஜிப்சம் கற்கள் நிலத்தடியில் இயற்கையாகக் காணப்படுகின்றது.
அதே வகையில் எமன் ஏரியில் வெள்ளை வெளேர் கற்கள் தெரியும் வரை அரசியல்வாதிகள் திருடி விட்டு ஏரியை கற்பழித்து வைத்துள்ளதால் இந்த ஏரியை தமிழ் நாடு அரசு சிமெண்ட் கழக அரியலூர் பிரிவு அதிகாரிகள் பார்வையிட்டு இந்த ஏரியை சுண்ணாம்பு கல்
சுரங்கமாக மாற்றி இந்த பகுதிக்கு தொழில் வாய்ப்புகளையாவது ஏற்படுத்த வேண்டும் என்றனர்....
தண்ணீர் வரத்து இல்லை..வாய்க்கால் இல்லை....அளவுக்கு அதிகமாக சுரண்டி ஆட்டைய போட்டாகியாச்சு...
டாண்செம் பிழைச்சு போனால் நாலு பேருக்கு வேலை கிடைக்குமே...
அரசு திருந்துமா..திருடனுக்கேகை கொடுக்குமா...
அரியலூர் சட்டநாதன்
Comments
Post a Comment