தமிழ்நாடு செய்தித்துறையினர் யூனியன் மற்றும் செட்டிநாடு பல்நோக்கு மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச மருத்துவம் மற்றும் ரத்ததான முகாம்.
சென்னை மாநகராட்சி 15 வது மண்டலத்திற்குட்பட்ட காரம்பாக்த்திலுள்ள கங்கை அம்மன் கோயில் வளாகத்தில் தமிழ்நாடு செய்தித்துறையினர் யூனியன் மற்றும் செட்டிநாடு பல்நோக்கு மருத்துவமனையும் இணைந்து இலவச முகாமை நடத்தினர்.
இந்நிகழ்வில் முதலாவதாக மாநகராட்சி 198 வது மாமன்ற உறுப்பினரும் பாஜக ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாநிலத் துணைத் தலைவர் லியோ என்.சுந்தரம், தமிழ்நாடு செய்தி துறையினர் யூனியன் மாநிலத் தலைவர் ஸ்ரீதர், மாநில பொதுச் செயலாளர் கொளத்தூர் நண்பன் சத்யா, மாநில துணை தலைவர் மாலை முரசு அகமதுஅலி, மாநில அமைப்பு செயலாளர் அரசுமலர் பாலமுருகன், மாநில செய்தி தொடர்பாளர் அரசியல் அரிச்சுவடி லோகேஷ், அலுவலக செயலாளர் கொளத்தூர் நண்பன் சக்தி மாரியப்பன், காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பாளர் மதன் கோபால், முன்னாள் கவுன்சிலர் புருஷோத்தமன், வணிகர் சங்க முன்னாள் செயலாளர் லயன்ஸ் அன்பழகன், மகி என்கிற பழனி, கார்த்திக், அன்பரசு, மோகன், அவர்களுடன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு செய்தித்துறையினர் யூனியன் தென் சென்னை மாவட்ட தலைவர் D.செல்வா ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமில், சங்க நிர்வாகிகள் சக்தி மாரியப்பன், மதன் கோபால், பாஜக நிர்வாகிகள் உள்ளிட்ட பொதுமக்கள் ரத்த தானம் வழங்கினர்.. மேலும் பொதுமக்களுக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், கண்டறிதல் மற்றும் அனைத்து நோய்களுக்கும் மருத்துவர்கள் பரிசோதனை செய்யப்பட்டு அவர்களுக்கு இலவசமாக மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. இதில் பத்திரிகை துறையை சார்ந்தவர்கள், உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
Comments
Post a Comment