ராகுல் காந்தி பிறந்த நாளையொட்டி வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் பொதுமக்களுக்கு இலவச நீர் மோர் பந்தல் திறப்பு..!
ராகுல் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் டில்லி பாபு தலைமையில் கொளத்தூர் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக தண்ணீர் பந்தல் திறந்து வைத்து அக்கட்சியின் கொடி ஏற்றி பொதுமக்களுக்கு மோர் மற்றும் குளிர்பானம் வழங்கப்பட்டது,
தொடர்ந்து 19 நாட்களாக பொதுமக்களுக்கு குடிநீர் மற்றும் மோர் வழங்கப்பட்டு 20 நாளான ராகுல் காந்தி பிறந்தநாளன்று பட்டாசு வெடித்து கேக் வெட்டி இனிப்புகளை வழங்கி காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடினர் இந்நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளையும் 64வது ஏ வட்டத் தலைவர் வேலு மற்றும் ஒன்றாவது சறுக்கல் தலைவர் முரளி ஏற்பாட்டில் நடைபெற்ற பிறந்தநாள் நிகழ்ச்சியில் கட்சியின் மாநில மற்றும் மாவட்ட தலைவர்கள் கட்சி நிர்வாகிகள் வட்ட பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் இதில் சிறப்பு நிகழ்வாக ராகுல் காந்தி பெயரில் குமரன் நகர் முருகன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
Comments
Post a Comment