தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சஙகம் சார்பில் பத்திரிகை ஆசிரியர்கள் கலந்தாய்வு கூட்டம் 31.08.2023 அன்று சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்றது.தமிழகம் முழுவதிலும் இருந்து நூற்றுக்கணக்கான பத்திரிகை ஆசிரியர்கள் கலந்துக் கொண்டனர்.
துறைச் சார்ந்த ஆலோசனைகள், கருத்து பரிமாற்றம், உரிமைகள், சலுகைகள், கடமைகள், கோரிக்கைகள், ஒற்றுமையின் அவசியம் உள்ளிட்டவை விவாதிக்கப்பட்டது. இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான பத்திரிகை ஆசிரியர்கள் கலந்துக் கொண்டது, நமது ஒற்றுமை உணர்வை மேலும் வலுப்பெறவும், நமது ஒற்றுமைக்கு அடிதளமிட்டது இந்த கூட்டம். பத்திரிகையாளர் நலன் சார்ந்த பல்வேறு முன்னெடுப்புகளை அனைவரின் ஆதரவுடன் செயல்படுத்தப்படும். நிகழ்சியின் முன்னதாக சமீபத்தில் மறைந்த பத்திரிகையாளர்கள் திரு.துரை பாரதி, முரசொலி துணை ஆசிரியர் திரு.முரசொலி ராஜா, திராவிடர் குரல் ஆசிரியர் திரு.சோ.பழனியப்பன், நமது நாடு ஆசிரியர் திரு.நவீன் பிரபாகர், தாமரை இதழ் ஆசிரியர் திரு.சேகர், மக்கள் கட்டளை ஆசிரியர் திரு.பாக்யராஜ், விடியும் நேரம் ஆசிரியர் திரு.தாமஸ், மூத்த பத்திரிகையாளர் திரு.இராமஜெயம், ஈ டிவி செய்தியாளர் திரு.லெனின், புதிய தலைமுறை தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் திரு. சங்கர் ஆகியோரின் திரு உருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. மறைந்த பத்திரிகையாளர்களின் குடும்பத்தினரும் அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.
Comments
Post a Comment