ஈரோடு சீனாபுரத்தில் 24×7 மது விற்பனை..! போலி மதுபானத்தால் குடிமகன்கள் அச்சம்..!! டாஸ்மாக் பார் உரிமையாளர் பிரகாஷுக்கு துணைபோகும் காவல்துறை அதிகாரிகள்..!
மதுவிலக்கு துறை அமைச்சராக முத்துசாமி பதவியேற்றுடன் சில நாட்களுக்கு ஈரோட்டில் மதுக்கடைகள் விற்பனை கட்டுக்குள் இருந்தது . ஆனால் கடந்த சில மாதங்களாக ஈரோடு மாவட்டம் முழுவதும்
24×7 நேரமும் மது விற்பனை தாராளம் நடைபெறுகிறது. இதில் குறிப்பாக
போலி மதுபானங்கள் அதிகளவு விற்பனைக்கு வருகிறது, டாஸ்மார்க் கடைகள் வேலை நேரம் ஆன மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை கடையில் வாங்கும் மதுபான சரக்கை தவிர. பார்களில் இல்லிகளாக வழங்கப்படும் மதுபான கட்டிங் பெரும்பாலும் போலி மதுபானம் ஆகும்
இதனை அருந்தும் குடிமகன்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளார்கள்.
அமைச்சர் முத்துசாமி மது குடிப்போரே குறைக்கவும், மது விற்பனையை குறைக்கவும் தமிழகம் முழுவதும் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார் . ஆனால் தனது சொந்த மாவட்டமான ஈரோட்டில் அமைச்சரின் உத்தரவை மதிக்காத அதிகாரிகள் மெத்தனமாக மாமூல் வாங்கிக் கொண்டு செயல்படுகிறார்கள். மது விற்பனை குறித்து புகார் அளித்தால் அவர்கள் மீது பல்வேறு பொய் வழக்குகள் போடப்படும் என காவல்துறைகள் மிரட்டி வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டம் சீனாபுரத்தில் இரண்டும் மதுபான கடைகள் உள்ளன மற்றும் ஈங்கூரில் ஒரு மதுபான கடை உள்ளது . இந்த இரண்டு மதுபான கடையின் பார் நடத்தும் ஒப்பந்த பணம் டிடி கட்டாததால் சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனை டாஸ்மாக் பார் மீறி அருகிலேயே ஈரோடு மாவட்ட பார் உரிமையாளர்கள் சங்க செயலாளர் பிரகாஷ் என்பவர் தைரியமாக சட்டவிரோதமாக திருட்டுத்தனமாக பார் நடத்தி வருகிறார். 24 மணி நேரமும் அனைத்து வகையான சரக்குகளும் ப்ளாக்கில் இரண்டு மடங்கு விலைக்கு விற்று வருகிறார், டம்ளர், தண்ணீர் ,ஸ்னாக்ஸ் இலவசமாக வழங்கி குடிமகன்களை தனது இல்லிகள் பாருக்கு கவர்ந்து வருகிறார் . இவரிடம் விற்கப்படும் மதுபான சரக்கு போலியான மதுபானமா என்ற சந்தேகம் . அந்த பகுதி மக்களின் மனதில் அச்சத்தை உருவாக்கி உள்ளது.
அதற்கான காரணம் பிரகாஷின் கடந்த காலப் பின்னணியாகும் சாதாரண டாஸ்மார்க் சேல்ஸ்மேன் ஆக தனது வாழ்க்கையை தொடங்கிய பிரகாஷ். தனது கடையில் உள்ள சரக்கை திருடி தண்ணீர் கலந்து விற்ற புகாரில் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டார் இதனால் அவமானம் அடைந்த பிரகாஷ் வேலையை ராஜினாமா செய்துவிட்டு . ஒரு கடையில் திருடிய லாபத்தை அனைத்து கடையிலும் செய்ய உள்ளடி வேலை பார்த்தார். இதனால் கதிரபட்டி, ஆயிகவுண்டம் பாளையத்தில் போலி மதுபானம் விற்ற வழக்கில் சிக்கினார். தொடர்ந்து தனது பாதுகாப்புக்காக தனியரசின் கொங்கு கட்சியில் இணைந்து அதிமுகவுடன் இணக்கம் காட்டி பல்வேறு முறைகளில் ஈடுபட்டு வந்தார். இவரின் திருட்டு வேலை கண்டு அதிர்ச்சடைந்த முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் கட்டம் கட்டி தனது அருகில் வராது வைத்திருந்தார். தற்போது ஆட்சி மாறியதாலும் திமுக ஆட்சி வந்ததால் திமுக பக்கம் சாய்ந்து கொண்டு அமைச்சர் முத்துசாமியின் வலது கை என்று கூறிக்கொண்டு. எப்பொழுது கேட்டாலும் அமைச்சருடன் இருக்கிறேன் ,சென்னையில் இருக்கிறேன் என்று அதிகாரிகளை நடவடிக்கை எடுக்க விடாமல் மிரட்டி காரியம் சாதித்து வருகிறார். இவருக்கு நேர்மையாக இருக்கும் அதிகாரிகளை கண்டால் பிடிக்காது அந்த அதிகாரிகள் மீது பல்வேறு பெயரில் பல தரப்பட்ட புகார்கள் தொடர்ந்து அனுப்புவார் .ஏதாவது ஒரு போலியான ரெக்கார்டுகள் தயார் செய்து அவர்களை மாட்டி விடுவது வழக்கம். ஒரு முறை டாஸ்மார்க் மாவட்டம் மேலாளர் சிக்க வைத்துள்ளார் . அதேபோல் காவல்துறை அதிகாரிகளையும் மாட்டி வைத்துள்ளார். எனவே இவரிடம் வம்பு வைத்துக் கொண்டால் பொறியியல் சிக்கும் எலியை மாட்டிக் கொள்ளுவோம் என்ற அச்சத்தில். இவர் பக்கம் எந்த அதிகாரியும் தலை வைத்து படுப்பதில்லை. நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள் .
அமைச்சர் முத்துசாமி நேரடியாக தலையிட்டு இவர் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பிரகாஷின் அடாவடி கொட்டம் அடங்கும். சீனாபுரத்தில் இரண்டு டாஸ்மாக் கடைகள், ஈங்கூர் டாஸ்மாக் கடைகளில் 24 மணி நேரமும் விற்க பிரகாஷ் கண்ட்ரோலில் போலி மதுபான சரக்கு நடமாடுவதாக தகவல் .
அதிகாரிகள், போலீஸார் மற்றும் மது விலக்கு போலீசார்க்கு மாமூல் கொடுத்து விட்டு.
24 மணி நேரமும் போலி மதுபானங்களை தாரளமாக விற்று வருகிறார்கள். மேலும் அதிகமான லாபத்திற்காக போலி மதுபான சரக்கு விற்றபதால் . அப்பாவி மக்களின் உயிர் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. மது அருந்திவிட்டு தன்னிலை மறந்து நிர்வாணமாகவும் , மது பிரியர்கள் தங்களுக்கு ஆபாசமாக பேசுவதும் பெண்களை கேலி, கிண்டல் செய்வது மற்றும் காலையிலும்,மாலையிலும் பள்ளி செல்லும் மாணவ மாணவிகளும் இதனால் பெரும் சிரமம் ஏற்படுகிறது.
நேர்மையான அமைச்சர் முத்துசாமி, மாவட்ட கலெக்டர்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் பெருந்துறை காவல்துறை கண்காணிப்பாளர் உடனடியாக எடுக்க வேண்டும் என்பதை அப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. சீனாபுரம் பிரகாஷின் மதுபான திருட்டு தொழிலுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா? அல்லது தொடர் கதையாக நடக்குமா?
Comments
Post a Comment