தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் 615 உதவி ஆய்வாளர் தேர்வு செய்வதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. அதில் 123 பணியிடங்கள் துறை ரீதியான ஒதுக்கீட்டுக்காக ஒதுக்கப்பட்டது.
இந்த இந்த துறை தேர்வில் தமிழ்நாடு முழுவதும் காவல் துறையில் பணியாற்றி வரும் 16 ஆயிரத்து 11 காவலர்கள் கலந்துகொண்டு போட்டியின்றி எழுத்து தேர்வு உடல் திறன் தேர்வு நேர்முகத் தேர்வு மூன்று கட்டங்களாக நடைபெற்றது கடந்த மாதம் 30 -ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் திருப்பூர் மாநகரில் பணியாற்றி வரும் நான்கு காவலர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருப்பூர் மாநகர குற்றப்பிரிவில் பணிபுரிந்து வரும் காவலர் அஜித்குமார். தமிழக அளவில் முதலிடம் பிடித்த திருப்பூர் தெற்கு போக்குவரத்து காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் முதல் நிலைக் காவலர் சுரேஷ்.5-வது இடத்தை வென்றார். மாநகர குற்றப்பிரிவில் பணியாற்றி வரும் முதல் நிலைக் காவலர் கணேசமூர்த்தி ஆயுதப்படையில் பணியாற்றி வரும் முதல் நிலை காவலர் கனிராஜா ஆகியோர் தேர்ச்சி பெற்றனர். திருப்பூர் மாநகர காவல் துறையில் பணியாற்றி வரும் சப்இன்ஸ்பெக்டர் தேர்வில் தேர்ச்சி பெற்ற நான்கு காவலர்களுக்கும் திருப்பூர் மாநகர காவல் ஆணையாளர் பிரவீன் குமார் அபினவு வெகுவாக பாராட்டினார்.
உதவி ஆசிரியர் சரவணகுமார்
Comments
Post a Comment