அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகேயுள்ள வளவனேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா(43). சவுதியில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பானுமதி(35), மகன்கள் பிரசாத்(13), சாத்விக்(2), மகள் சாத்விகா(2). இதில்,சாத்விக், சாத்விகா ஆகியோர் இரட்டையராகப் பிறந்தவர்கள்.
இந்நிலையில், ராஜாவின் வீட்டில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் மீன்சுருட்டி போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். அங்கு வந்த போலீஸார் வீட்டின் கதவை உடைத்துச் சென்று பார்த்தபோது, தூக்கில் தொங்கிய நிலையில் பானுமதியும், பிரசாத், சாத்விக், சாத்விகா ஆகியோர் தரையிலும் உயிரிழந்த நிலையில் கிடந்தனர். இதையடுத்து 4 பேரின் உடல்களை மீட்ட போலீஸார், பிரேதப்பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அவர்களது உடல்கள் அழுகிய நிலையில் இருந்ததால், உயிரிழந்து 4 நாட்கள் ஆகியிருக்கலாம், குழந்தைகள் 3 பேரையும் விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, பானுமதி தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீஸார் தெரிவித்தனர்.சம்பவ இடத்தில் எஸ்.பி. செல்வராஜ் ஆய்வு மேற்கொண்டார்
Comments
Post a Comment